[one_half]அனுதினமும் சிதறும் முத்தங்களை
கவனிக்க மறந்த ஒருவனை
கண்காணிக்கும் இரவு
தொலைபேசி வாயிலாக அலறுகிறது
அடுத்த நாள் முத்தங்கள் நிகழும் முன்னர்
சிதறியவற்றை இழுத்துப் போகும் எறும்புகளை
முணுமுணுப்பாக்கி அது தன்னை
அம்பலப்படுத்திக் கொள்கிறது
மேலும் பதற்றத்தில் தன் காதலிகளை கண்ணியமாக
சேகரிக்க முடியாத அதன் அவலம்
கைதவறி காலணிகளை எடுத்து
அணைத்துக் கொள்கிறது
அடையாளமற்ற காலணிக்குள்
பெண்கள் அடைந்துகிடப்பதாகவும்
அதன்வழியே தேவதைகள் தொலைந்து
கொண்டிருப்பதாகவும் அவ்விரவு பீதியடைகிறது
பகலில் காலணிகளை யாரும் தொடக்கூடாது
எனக் கட்டளையிடும் அது சுவர்க் கோழிகளின்
சப்தங்களுக்கு இன்னும் மிரள்கிறது
காலணிகளைவிட முக்கியமானது கால்கள்
என்றவன் தனது முத்தங்களை
இன்னும் தவறவிட்டுக்கொண்டே இருக்கிறான்.[/one_half]
[one_half_last][/one_half_last]