[one_half]அருவிக்குப் போகும் போதெல்லாம்
அப்பாறைகள் நாட்கணக்கில்
குளிப்பதாய் குதூகலம் கொள்வேன்
அத்தனை உருட்டல்களிலும் திரண்டு
ஒளிரும் கூழாங்கற்களை எடுத்துக் கொள்வதும்
பாதங்களில் நீடிக்கும் வலியையும்
வழக்கமாய் கொண்டு வருவதுதான் எனினும்
அருவியைத் தட்டிவிட்டவன்
அள்ள முடியாது என்பதாய்
ஓ . . . வென இரைந்து பாயும் பள்ளத்தாக்குகளில்
அந்த நீர்மொழி கொண்டு செல்வது என்ன
மிச்சம் இரண்டு கூழாங்கல் கவிதைகள்
மறுநாள் கோடையில்
நீரின்றித் தகிக்கும் பாறைகளின்மேல்
கறுத்த பல்லிகள் ஊர்ந்து திரிவதும்
வெளுத்த மணலும் தட்டி விடுபவன்
கைகளுக்கு காத்திருக்க
பள்ளத்தாக்கிலிருந்து ஃப்போ என்ற சப்தம்
மேல்நோக்கி வெடித்து வர
வழி நடையில் திரும்பியிருக்கலாம்தான்
அந்த வெண்மேகங்களும்.[/one_half]
[one_half_last][/one_half_last]