[one_half]எனது பிராத்தனையின்
கிளிகள் அமரும் மாடம்
இரவு கரைந்துவிட்ட பகலில்
உனது நடமாட்டம்
சொல்லிச் செல்கிறது
பழங்காவியத்தின் ஒரு நடிப்பை
எனது இருப்பை
எல்லாவற்றிலும் கலைத்துப் போடுகிறேன்
உனது ஆடைகள்
என்னவாய் நடிக்கின்றன
நான்பழகிய ருசி உனது ஒரு கிண்ணம்
ஆதலால் மீதமிருக்கும் ஒரு கனவு
இது நெருஞ்சி முள்காடு
விரும்பிய யுகத்தில் திரிந்தலைந்து
பிறக்காத நிலத்தில்
உன்னையடைவேன்
அதுவரை பரக்காதிருக்கட்டும் கிளிகள்.[/one_half]
[one_half_last][/one_half_last]