[one_half]கூச்சலிட்டுப் பார்க்கிறார்கள்
கொடிமரத்தை அசைக்கிறார்கள்
கல்லெடுத்து எறிகிறார்கள்
கண்மூடி ஏசுகிறார்கள்
ஒன்றும் அசைவதாய் இல்லை
வீதியெங்கும் நாய்கள் பெருகித்திரிகின்றன
சரிபார்க்க வந்தவன்
கல்லாய் சமைந்து போயிருக்கிறான்
உத்திரவாதம் தந்தவர்கள்
உல்லாச இடங்களுக்குப் போய் விட்டார்கள்
போன ஜென்மத்தில் பார்த்தவனெல்லாம்
இந்த ஜென்மத்திலும் கண்டு
சிரித்துவிட்டு போகிறார்கள்
திசையெல்லாம் வட்டமாகத்தான் வளைகிறதா
நான் சொல்லிவிட்டேன்
எந்த கேள்விக்கும் பதிலில்லையாம்
திரும்பும்போது என்னையும்
அழைத்துக் கொண்டு போய்விடுங்கள் [/one_half]
[one_half_last] [/one_half_last]