[one_half]எனது அலுவலகம் நனைந்து கொண்டிருக்கிறது
கிளை உயர்ந்த புளியங்கொம்புகளில்
வசித்த குரங்குகளைக் காணவில்லை
கீழ்த்தளத்தில் வாகனங்கள்
புகை எழுப்பி விரைய
ஒரு மாலையின் வரவை
எனது கோப்புகளில் இருந்து
பிரித்தெடுக்க முடியவில்லை
நவீனத்தின் கவிதைகளில் இருந்து
உனது முணுமுணுப்பு இம்மாலையை
காதலின் முத்தத்திற்கு தயார்ப்படுத்துகிறது
இம்மழையின் பரிசுத்தம் உன் இதழ்கள்
எனது இயற்கையின் வெட்ட வெளியில்
உனது நடனம்
ஆயிற்று இருப்புகளைக் கலைந்து
ஒரு சந்திப்பு
தீராத உயிர்களின்
ஒரு நாள் தோற்றம்
முத்தம்
மாலை
இசை
மழை
எவ்வளவு பரிசுத்தம் உன் காதல்
ஞாபகமிருக்கிறதா
முன்னொருநாள்
உயர்ந்த கிளையில் அமர்ந்து எனக்கு
அதைச் சொன்னாய்.
[/one_half]
[one_half_last][/one_half_last]