[one_half]நண்பகல் சாலையில் விரைந்து விடுபடுகின்றன
பெயர்பலகைகள்
தொலைதூரம் கடந்த கொக்குகள்
தென்னையில் பூத்திருக்கக் கண்டேன்
எனது வாகனம் சாலை வழிகளைச் சக்கரத்தில்
இழுத்துச் சுருட்டுகிறது
இன்னுமொரு உலகத்தில் சந்திக்க
என்ன இருக்கிறது
அந்தக் கொக்குகள் எப்போது பறக்கும்
வாத்துக்களை நீண்ட கழியில்
நடத்திச் செல்கிறவன்
கண்திறக்காத பூங்குஞ்சுகளை
கைப்பையிலிருந்து எடுத்துக் காண்பிக்கிறான்
திரும்புவதெனில்
போய்ச் சேருமிடமா
வந்து சேருமிடமா
பூமி சுற்றும்போது
சாலை எந்தத் திசையில் நகரும்.[/one_half]
[one_half_last][/one_half_last]