[one_half]மறுபடியும்
சில இரவுகளை எனக்குத் தருவது
உனது பெருந்தன்மைதான்
வாழைக் குருத்துகள்
சில அங்குலம் வளர்ந்துவிடுகிற இரவை
நீயின்றி நான் என்ன செய்வது
பழஞ்செய்யுள்கள் எழுதித் திரிந்த
சங்ககாலத் தோழிகள்
இந்த நகரத்தில் எந்தத் தெருவில் வசிக்கிறார்களோ
நள்ளிரவு தாண்டியும்
உனது அழைப்பு ஒலித்து
தீராத கோபத்தையும்
இன்னிசையாக்கிவிடுகிறது
நான் உறங்கத் தவிக்கிறேன்
சீதோஷ்ணம் இதமாக இருக்கிறது
இந்த இரவை
கடந்த முத்தத்தின் பரவசத்திற்காக
விட்டுக்கொடுத்தமைக்கு நன்றி
விழித்திருந்து நீ எழுதும்
கவிதக்கு என் வாழ்த்துக்கள்[/one_half]
[one_half_last][/one_half_last]