[one_half]வெகு தொலைவில் அல்ல
மிக அண்மையில் கேட்கிறது
நீ செய்துமுடித்தவற்றின் குரல்
என்னால் காத்திருக்க முடியாது
என் யாசிப்பின் கடைசி நொடியில்
மகிழம் பூக்களின் வெப்ப வாசனை
மற்றுமொரு குளிரூட்டம் பெற்ற அறை
வலியற்றுப் போய்விட்டன யாவும்
வாத்சல்யமற்ற உன் குரலின் தொலைவு
நான் தொடும் கணம்
ஒரு விடுபடும் சம்பவம்
மிக அண்மையில் இதோ நெருங்கிவிட்டது
உனக்குக் கேட்கிறதா.[/one_half][one_half_last][/one_half_last]