[one_half]இந்தக் கோடையில்
வாசல் வாழைகளை
எருமைக்கன்றுகள்
தாகத்திற்காகக் கடிக்கின்றன
முகம் கொதிக்கும் நண்பகலை
வணங்குகிறேன்
வெயில் வாங்கி விற்றுக்கொண்டிருக்கும் பூமி
இன்னமும் பழங்களில் புளிப்புச்சாறு
ஓரிருநாள் கோடைமழையின் புழுக்கம்
வறண்ட நீர்நிலைகளுக்கு அப்பால்
புறநகர்ப் புல்வெளிகளில்
விட்டில் கொத்தும் நாரைகள்
எனது தலைமுறையின் கோடை
முன்னெப்போதையும்விட வீரியமானது
அது கடவுளைக் கொன்றுவிட்டு
நம்பிக்கைகளைப் பெரிதும் அகலமாக்கியிருக்கிறது
எனது குடிநரை
பத்திரப்படுத்திக்கொண்டு கோடையின் ஊடாக
பயணித்துக்கொண்டிருக்கிறேன்[/one_half]
[one_half_last][/one_half_last]